குஜராத்தில் டிரக் மீது ஜீப் மோதி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!

குஜராத்தின் படான் மாவட்டத்தில் டிரக் மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்தனர்.
15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜீப் ராதன்பூர் அருகே வராகி கிராமத்தில் வந்த போது திடீரென டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் சென்றுக் கொண்டிருந்த எழுதுபொருட்கள் ஏற்றிச் சென்ற டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானது.
காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், ஜீப் ஓட்டுநர் மற்றும் டிரக் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Comments