பெங்களூருவில் உயர்ரக கார் கேரேஜில் தீ விபத்து... 14 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூருவில் உயர்ரக கார் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதமடைந்தன.
கஸ்தூரி நகரில் உயர்ரக கார்களை பழுது பார்க்கும் தனியார் கேரேஜில் இரவு ஒரு காரில் பற்றிய தீ மளமளவென்று பரவி அனைத்து கார்களிலும் பிடித்து எரியத் துவங்கியது.
நெருப்பு வேகமாக பரவுவதைக் கண்ட பணியாளர்கள் உடனடியாக கட்டடத்தில் இருந்து அனைரையும் வெளியேற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நான்கு தீயணைப்பு வாகனங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து பானஸ்வாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments