முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு ஒப்புதல் கிடைக்காததால் 43 நாட்களாக மூட்டு வலியுடன் காத்திருக்கும் பெண் நோயாளி..!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு நிதி ஒப்புதல் அளிக்காததால் நோயாளி ஒருவர் 43 நாட்களாக மூட்டு வலியுடன் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 3-ம் தேதி சென்னையை சேர்ந்த செந்தாமரை என்ற பெண் வலது கால் மூட்டு தேய்மானம் அடைந்ததான் காரணமாக, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மருத்துவர் ஒப்புதல் அளித்தும், அந்த துறையில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 43 நாட்களாக அந்தபெண் மருத்துவ மனையிலேயே இருந்து வருகிறார்.
Comments