அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதேகட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மட்டுமின்றி மேலும் சில நிர்வாகிகள் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய நிக்கி ஹாலே, தாம் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதை அறிவித்தார்.
தமது பெற்றோர் ஒரு சிறப்பான வாழ்க்கையை தேடி அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் .
Comments