ஆளுநர் அரசியல் களத்தில் இறங்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

ஆளுநர் அரசியல் களத்தில் இறங்கக்கூடாது என தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு பெஞ்ச் தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த உத்தவ தாக்ரே அரசுக்கு எதிரான நெருக்கடிகள் குறித்து விசாரித்த போது நீதிபதி சந்திரசூட் தமது வாய்மொழி கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த வழக்கில் மகாராஷ்டிர ஆளுநரின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜக மற்றும் சிவசேனா இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவினர் விலகியது குறித்து விளக்கினார் .
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் குறுக்கிட்டு அரசாங்கத்தை அமைக்கும் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் கேட்க வேண்டும் என்றும், ஆளுநர் அரசியல் களத்தில் நுழையக்கூடாது எனவும் தலைமை நீதிபதி மீண்டும் குறிப்பிட்டார் .
Comments