திருடு போன விலை உயர்ந்த வாகனத்தை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போலீஸ்க்கு சங்கர் ஜிவால் பாராட்டு..!

சென்னையில் திருடப்பட்ட விலை உயர்ந்த வாகனங்களை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரவாயல், வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மளிகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரை தொடர்ந்து, அசோக்குமார் என்பவர் தமது இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் அளித்தார்.இவரது வாகனத்தில் பொருத்தி இருந்து ஜிபிஎஸ் கருவியை வைத்து ராயப்பேட்டையை சேர்ந்த ஜீவா மற்றும் அகிப் அகமதை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் மளிகை கடையில் திருடியதையும் மேலும் ஒரு வாகனத்தை திருடியதையும் தெரிவித்ததால் அதனையும் போலீசார் மீட்டனர்.
Comments