கல்ல தூக்கி எறியும் அமைச்சர் பேச்சில் அசால்ட் செய்த இ.பி.எஸ்..! பால்விலை கூடி போச்சிப்பா..

0 2140

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பால்வளத்துறை அமைச்சர்  நாசர் மக்கள் மீது கல்லை தூக்கி எறிவதாக ஈபிஎஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், தான் தேனீர் குடிப்பதற்கு கூட யோசிக்கும் அளவிற்கு பால் விலையும் உயர்ந்து விட்டது என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மக்கள் மீது கல்லை கொண்டு எறிவதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறியதால், ரவுடிகள் தலையை வெட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்

திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிமுகப்படுத்திய அமைச்சர் பொன்முடி, அவரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ என்றும் முன் கூட்டியே அது முடிவாயிடுச்சி என்றும் குறிப்பிட்டார்

அமைச்சர் முத்துசாமி பேசும் போது வெற்றி என்பது சாதாரணமாக இருக்க கூடாது வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும், என்று கூறினார்

இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் , பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வு போல தேனீர் குடிப்பதற்கு கூட யோசிக்கும் அளவிற்கு பால் விலையும் உயர்ந்து விட்டது என்று ஆதங்கப்பட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments