காதலில் ஜெயித்தவர் காதலர் தினத்தில் சடலமான சோகம்..! சாதி பார்த்த காதலால் விபரீதம்..!

0 2974

காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். காதலில் ஜெயித்தவர் காதலர் தினத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியை சேர்ந்த செல்வம்- வனிதா தம்பதியரின் இரண்டாவது மகள் பிரியங்கா. காரைக்குடி அடுத்த ஆறாவயலில் செயல்பட்டு வந்த பஞ்சுமில்லில் பணியாற்றி வந்த நிலையில் அங்கு தன்னுடன் பணிபுரிந்து வந்த ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் தாயிடம் பேசிய பிரியங்கா தன்னை மாமியார் சாதியை சொல்லி திட்டியதாகவும், வரதட்சணையாக நகை பணம் ஏதுவும் கொண்டு வரவில்லை என்றும் தினம் தினம் அவமானப்படுத்தி வருவதாகவும், அதற்கு தனது கணவரும் உடந்தையாக இருப்பதாகவும் கூறி அழுததாக கூறப்படுகின்றது .

அதன் பின்னர் மகளை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காதலர் தினத்தன்று மாலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பிரியங்காவின் சடலத்தை மீட்ட காளையார்கோவில் போலீசார் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்து காதலனை நம்பி வாழச்சென்ற தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி இருப்பதால் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதுவரை தனது மகளின் உடலை வாங்க மறுப்பதாகவும் தாய் வனிதா, சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

காதல் சாதி பார்க்காது.. மதம் பார்க்காது.. இனம் பார்க்காது ஆனால் பணம் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கும் என்பதற்கு மாமியார் வீட்டில் அந்தப்பெண்ணுக்கு நேர்ந்த திருமணம் செய்த வரதட்சணைக் கொடுமையே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments