திருமணத்தில் விருப்பமில்லாததால் விபரீத முடிவு.. கல்லூரியில் விஷம் குடித்து மாணவி உயிரிழப்பு!

கோயம்புத்தூரில், திருமணத்தில் விருப்பமில்லாத மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டதால், கல்லூரியில் வைத்து மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார்.
ஜி.என்.மில்ஸ் உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்சா அதேப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர் உறவுக்கார பையனின் ஜாதகத்தை பொருத்தம் பார்த்ததாக கூறப்படுகிறது.
திருமணத்தில் தனக்கு விருப்பமில்லையென கூறி வந்த ஸ்ரீவர்சா, கல்லூரிக்கு வரும்போது எடுத்து வந்த சாணிப்பவுடரை குடித்து விட்டு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக, அவரை கல்லூரி நிர்வாகத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments