வளர்ப்பு நாயை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக அறிவித்து எலான் மஸ்க் கிண்டல்..!

0 4081

தனது வளர்ப்பு நாய் Floki தான் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி என எலான் மஸ்க் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், அப்போது C.E.O பொறுப்புவகித்த இந்திய வம்சாவளி பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தார்.

அந்த பொறுப்புக்கு ஒரு முட்டாளை தேடிவருவதாக ஏற்கனவே பதிவிட்டிருந்த எலான் மஸ்க், தான் வளர்த்துவரும் Shiba Inu ரக நாய், டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் C.E.O நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் C.E.O-வை விட நாயின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments