மாவட்ட ஆட்சியரின் மடியில் அமர்ந்து கொண்டு காரிலிருந்து இறங்க மறுத்த சிறுவன்.. இணையத்தில் வைரல்!
உதகையில் ஆட்சியரின் மடியில் அமர்ந்து கொண்டு, காரிலிருந்து இறங்க மறுத்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித், திரும்பிச் செல்ல காரில் ஏறியபோது, அவரது மடியில் அமர்ந்து கொண்ட அர்ஷத் என்ற சிறுவன், காரிலிருந்து இறங்க மறுத்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்டு அங்கன்வாடி மைய காம்பவுண்ட் வரை சென்ற பின் அந்த குழந்தையை சமாதானம் செய்து அங்கன்வாடி காப்பாளரிடம் திரும்ப ஒப்படைத்தார்.
இதனை கண்டு ஆட்சியர் மற்றும் அருகிலிருந்தவர்கள் நகைத்தனர்.
Comments