மதுரையில் 17, 18ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!

0 1357

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு, மதுரை மாநகர் முழுவதும் வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க  காவல்துறை தடை விதித்துள்ளது.

மீனாட்சியம்மான் கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவை ஈசா யோகா மையத்தில் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் முர்மு தமிழ்நாட்டுக்கு 2 நாள்கள் பயணமாக வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு 18ம் தேதி பிற்பகல் வரும் குடியரசுத் தலைவர் முர்மு, மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

அங்கிருந்து கோவை ஈசா யோகா மையத்திற்கு புறப்படுகிறார். மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பாதுகாப்பு குழுவும் ஆய்வு மேற்கொண்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments