மும்பை முதல் நியூயார்க்.. "கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் உலகம் முழுவதும் 90 கோடி மக்களுக்கு கடும் ஆபத்து" - ஐநா எச்சரிக்கை

மும்பை முதல் நியூயார்க்.. "கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் உலகம் முழுவதும் 90 கோடி மக்களுக்கு கடும் ஆபத்து" - ஐநா எச்சரிக்கை
உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதால் மும்பை முதல் நியூயார்க் என பல்வேறு கடலோர நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என ஐநா பொதுச் செயலாளர் குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கடல் மட்டம் அதிகரிக்கக்கூடும் என்று கூறிய அவர், இதனால் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
நீர்மட்டம் உயர்வதால் கெய்ரோ, பாங்காக், டாக்கா, ஜகார்த்தா, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் குட்ரோஸ் எச்சரித்துள்ளார். கடல் மட்டம் அதிகரிப்பால் உலகம் முழுவதும் 90 கோடி மக்களுக்கு ஆபத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments