அதானி குழுமம் பற்றி பாஜக மறைக்கவோ அஞ்சவோ ஏதுமில்லை -அமித் ஷா

0 1208

அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவிடம் மறைக்கவோ அஞ்சவோ எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் ஷா, பாஜகவின் மீது ஊழல் புகார் சொல்ல யாராலும் முடியாது என்று கூறினார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிகளின் போது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்ததாக சிபிஐ அமலாக்கத்துறை போன்ற ஏஜன்சிகள் பதிவு செய்த வழக்குகளை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

இப்பிரச்சினை இப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் தாம் கருத்து கூறஇயலாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments