நியூயார்க்கின் புரூக்ளின் பரோவில் டிரக் மோதி ஒருவர் பலி; 8 பேர் காயம்..!

நியூயார்க் நகரின் புரூக்ளின் பரோவில் U-Haul டிரக்கை ஓட்டிசென்றவரை தடுக்க முயன்ற காவல்துறையினரிடம் இருந்து தப்பமுயன்றபோது சாலையோரத்தில் சென்றவர்கள் மீது டிரக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் அதிகாரி உள்பட 8 பேர் காயமடைந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய டிரக் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக நியூயார்க் சிட்டி போலீஸ் கமிஷ்னர் கீச்சட் ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
Comments