படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததை கண்டித்ததால் ஓட்டுநரின் முகத்தை பிளேடால் கிழித்த மாணவன்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசுப்பேருந்து ஓட்டுநரின் முகத்தை பிளேடால் கிழித்த பிளஸ் ஒன் மாணவனை, பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சோளிங்கரிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடி பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பயணித்துள்ளார்.
பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பாலாஜி, அந்த மாணவரை உள்ளே வரும்படி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த மாணவன், ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தான் வைத்திருந்த பிளேடால் அவரது முகத்தில் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
தப்பியோட முயன்ற மாணவனை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மாணவனை, சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்த உள்ளனர்.
Comments