ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்கள்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொங்கு நகரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளரான மணிகண்டன், நேற்றிரவு குடும்பத்துடன் தனது உறவினரின் இறுதிச்சடங்கிற்காக மோடமங்கலம் பகுதிக்கு சென்றுள்ளார்.
காலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள், தொழில் முதலீடுக்காக வைத்திருந்த 3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக போலீசில் புகாரளித்தார்.
வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து டி.வி.ஆர் கருவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக கூறப்படும் நிலையில், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments