இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, வி.சி.க நிர்வாகி செல்வா என்பவரின், மகள்கள் தமிழரசி, தமிழ்ப்பிரியா மற்றும் உறவுக்கார சிறுவன் அம்பேத்வளவன் ஆகியோர், சொந்த ஊரான இருதுக்கோட்டைக்குச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த டெம்போ வேன், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Comments