"ஏற்காடு மலைப்பகுதிகளில் எளிதில் தீ பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை" - சேலம் ஆட்சியர்

சேலம் மாவட்டம் ஏற்காடு, ஜருகுமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் மலைப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ஏற்காடு மற்றும் சுற்றுலா பகுதிகளில் கேம்ப் பயர் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
Comments