நியூசிலாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய கேப்ரியல் புயல், நகரத் தொடங்கியுள்ளது - கிரிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய கேப்ரியல் புயல், நகரத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
புயலால் வெள்ளம், நிலச்சரிவு, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதுடன், சாலைகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன.
மக்கள் வீட்டின் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்த நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அக்லாந்திலிருந்து தென் கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் நாட்டின் வடக்குத் தீவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் மையம் கொண்டிருந்த கேப்ரியல் புயல், தென்கிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பாக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments