துருக்கியில் 8 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து இளைஞர் உயிருடன் மீட்பு..!

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவித்த 17 வயது இளைஞர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கஹ்ரமன்மாராஸ் நகரில், முஹம்மது எனஸ் யெனினான் என்ற அந்த இளைஞர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 21 வயதான அவரது சகோதரரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Comments