தென்காசி காதல் திருமண விவகாரம்.. குருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்பி வைக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைகிளை

அரசு காப்பகத்திலுள்ள குருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்பி வைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்தது.
தென்காசி அருகே காதல் திருமணம் செய்த வினீத்திடம் இருந்து காதல்மனைவி குருத்திகா கடத்தப்பட்டது தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது, குருத்திகாவை தன்னுடன் அனுப்புமாறு அவரது தாத்தா சிவாஜி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்மீது, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, குருத்திகாவை வெளியே அனுப்பினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும், குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணை அறிக்கையை தென்காசி டிஎஸ்பி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Comments