காலம் காலமாக வாழும் காதலுக்கு ஓடுங்க தோழி ஓடுங்க..! சுவர் ஏறிக்குதிக்கும் காதல்..!
சென்னை ஸ்பென்சர் வணிக வளாகத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிச்சீறுடையுடன் வந்த மாணவர்கள் ஒரு சிறுமியை அழைத்துச் சென்று செல்பி, ரீல்ஸ் என பொது இடத்தில் அட்டகாசம் செய்தனர். தூத்துக்குடியில் பூங்கா காவலாளிக்கு பயந்து ட்டிச்சுவர் ஏறிக்குதித்து காதலர்கள் ஓட்டம் பிடித்தனர்..
நாடு முழுவதும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படு வரும் நிலையில், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் குவிந்து தங்களது காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்..
காதலர் தினத்தை எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பாரத் முன்னணி அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்..
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சிலர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் பதின் பருவ சிறுமி ஒருவருடன் ரீல்ஸ் வீடியோ செய்தும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் நடனமாடியும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்..
இதே போல தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் அத்துமீறி நுழைந்த காதல் ஜோடிகளை காவலாளி விரட்டியதால் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்..
கல்லூரிகளை கட் அடித்து விட்டு பூங்காக்களில் பாடம் படிக்க வந்த மாணவிகள் பலர் முகத்தை மூடியபடி தலைதெரிக்க ஓட்டம் பிடித்தனர்.
இவ்வளவு சம்பவத்திற்கு பின்னரும் எப்ப சார் பூங்கா கேட்டை திறப்பிங்க ? என்று சிலர் பூங்கா முன்பு காத்திருந்தனர்..!
Comments