அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 2 கட்டடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் சிசிடிவி படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
Comments