தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை

0 6928

தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆதித்யா ராம் குரூப், அம்பாலால், அசோக் ரெசிடென்சி, ரேடியன்ஸ் ரியாலிட்டி ஆகிய 4 நிறுவனங்களின் உரிமையாளர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் மட்டும் அண்ணா நகர், கிண்டி, நீலாங்கரை உள்ளிட்ட 11 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திற்கு பிறகு இந்நிறுவனங்கள் வீடு மற்றும் நில விற்பனையில் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், கணக்கில் வராத ரொக்க பணம் கை மாறியதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments