மூதாட்டி ஈமச்சடங்கு பணத்தை பெற்று ஏமாற்றிய காவலர் .. பணத்தை தராமல் மிரட்டல் விடுத்த காவலர் மீது போலீசில் புகார்..!

மூதாட்டி ஈமச்சடங்கு பணத்தை பெற்று ஏமாற்றிய காவலர் .. பணத்தை தராமல் மிரட்டல் விடுத்த காவலர் மீது போலீசில் புகார்..!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே, மூதாட்டி ஒருவரின் ஈமச்சடங்குக்கு வைத்திருந்த பணத்தை கடனாக பெற்ற காவலர் ஒருவர்,மூதாட்டி இறந்த பின்னரும் பணத்தை தராமல் ஏமாற்றுவதாக அவரது பேரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆர்கே பேட்டை ஆதி வராராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்ற மூதாட்டி இடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜமுனாவின் மகன் பிரசாந்த் என்பவர் காவல்துறையில் பணிக்கு சேர உள்ளதாக 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
இந்த தொகையை மூதாட்டியின் பேரன் சதீஷ்குமார் பலமுறை கேட்டும் தராமல் மிரட்டல் விடுத்த பிரசாந்த் மீது, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Comments