உத்தர பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி 3 கி.மீ. தூரம் இழுத்துச் சென்று விபத்து..!

உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் லாரியை ஓட்டிய நபர், கார் மீது மோதி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச்சென்ற வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
மீரட் நகரில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த கன்டெயினர் லாரி, திடீரென அவ்வழியே சென்ற கார் மீது மோதியதுடன், அதனை தரதரவென இழுத்துச்சென்றது.
காரில் பயணித்த 4 பேரும் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து கீழே குதித்து உயிர்த்தப்பினர். லாரியை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும் அதனை ஓட்டுநர் தொடர்ந்து இயக்கிய நிலையில், போலீசார் வாகனத்தை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
இதையடுத்து, ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Comments