ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகார துஷ் பிரயோகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னியிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கடந்த பத்தாம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி துவக்கப்பள்ளிக்குள் சென்று வாக்கு சேகரித்ததாகவும், இது தொடர்பாக கடந்த 11ம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆளுங்கட்சிக்கு இணக்கமாக செயல்படுவதாகவும் மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments