தங்கைக்கு வாரிசு வேலை கிடைக்காத ஆத்திரம்.. இருவர் கொடூர கொலை.. அண்ணனின் வெறிச்செயல்..!

சிவகாசியில் வாரிசு வேலை வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறில் தங்கையின் மாமியார் உள்பட
இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சிவகாசி ஆயில் மில் காலனி சேர்ந்தவர் ரவி, மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ரவிக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ள நிலையில், வாரிசு வேலைக்கு ரதிலட்சுமி முயன்றுள்ளார். இதற்கு மாமியார் முருகேஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பேச்சுவார்தையின் போது ஏற்பட்ட தகராறு முற்றியதை அடுத்து ரதிலட்சுமியின் அண்ணண் காளிராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கையின் மாமியார் முருகேஸ்வரி, மற்றும் தடுக்க வந்த கருப்பாயி தமயந்தி என்பவரை சரமாரியாக குத்தியுள்ளார். காளிராஜ் கத்தியால் குத்தியதில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments