டெல்லியில் லிஃப்ட்டில் சிக்கி 15 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

டெல்லியில் லிஃப்ட்டில் சிக்கி 15 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்தான்.
பவானா பகுதியில் உள்ள ஏர் கூலர் தொழிற்சாலை ஒன்றின் இரண்டாவது மாடியில் லிஃப்ட் அருகே சிறுவன் வேலை செய்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டதாகவும், அப்போது தரை தளத்தில் இருந்து லிஃப்ட் மேலே வந்ததால் சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்தாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த லிஃப்ட் பெரும்பாலும் கனரக பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுவதாக கூறப்படுகிறது.
Comments