படிக்க விருப்பம் இல்லாததால் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி விபரீத முடிவு..!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் பலரது முன்னிலையிலேயே 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கங்காதர நகரில் உள்ள மகாத்மா ஜோதிராவ் பூலே குருகுல பாடசாலையில் ஹாசினி என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கட்டடத்தின் 3-வது மாடியில் இருந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை அறிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழே குதிக்க வேண்டாம் என்று எடுத்துக்கூறியும் அவர்கள் முன்னிலையிலேயே மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கல்வி கற்க விருப்பமில்லாத நிலையில், பெற்றோர் வலுக்கட்டாயமாக படிக்க அனுப்பி வைத்ததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Comments