கனடா எல்லைக்கு அருகில் பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்..!

அமெரிக்கா- கனடா எல்லையில் உள்ள ஹூரோன் ஏரி மீது வட்டமிட்ட அடையாளம் தெரியாத பறக்கும் சாதனம் ஒன்றை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
இது இந்தவகையில் வீழ்த்தப்படும் நான்காவது சாதனம் ஆகும்.
மிச்சிகன் மாகாணத்தின் ஏரி மீது அடையாளம் தெரியாத சாதனம் பறப்பதாக வந்த தகவலையடுத்து அதனை சுட்டுத் தள்ள ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். எட்டுகோணமாக காட்சியளித்த அந்த வாகனத்தில் சரம் சரமாக தொங்கிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் விவரிக்கின்றனர்.
ஆனால் அது ராணுவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும் உளவுபார்ப்பதற்கான ஆற்றல்களும் இல்லை என்று கூறும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்பதால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
Comments