''வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்ததே தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்..'' - சீமான்..!

வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததே இங்கு குற்றங்கள் அதிகரிக்க காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தாம் இருக்கும் வரை எட்டு வழி சாலை ,பரந்தூர் விமான நிலையம், பேனாச்சின்னம் உள்ளிட்ட எதையும் அமைக்க முடியாது என்றும் கூறினார்.
Comments