கேரள பள்ளி மாணவ-மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கம்.. வெளியான அதிர வைக்கும் தகவல்கள்..!

கேரள பள்ளி மாணவ-மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கம்.. வெளியான அதிர வைக்கும் தகவல்கள்..!
கேரள பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறை நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாணவர்களிடையே நடைபெற்ற ஆய்வின்படி, 18 வயதுக்குட்பட்ட 40 சதவீதத்தினர் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தின் தங்கும் விடுதியில் போதையில் இளம்பெண் ஒருவர் வீறிட்டு அலறிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
படிப்பில் முதலிடம் வகித்த அந்த மாணவி பின்னர் போதைப் பொருளுக்கு அடிமையாகி பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடம் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் போதைப் பொருள் விற்கப்படுகிறதா என்று போலீசார் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Comments