நடுவானில் பறந்த டெல்டா விமானத்தின் இறக்கையில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கையில் தீப்பற்றியதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எடின்பர்க் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் இறக்கையின் பின்புறத்தில் தீப்பற்றி எரிவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் காரணமாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, நெருப்பு அணைக்கப்பட்டது.
Comments