சுற்றுலா சென்ற பிளஸ் டூ மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. பெற்றோர், உறவினர்கள் காவல்நிலையம் முன் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே சுற்றுலா சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து தனியார் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே சுற்றுலா சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து தனியார் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியிலிருந்து நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்ற நிலையில் ஆழியாறு அருகே நீர்வீழ்ச்சியில் குளித்தனர். அப்போது 3 மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை கண்ட சக மாணவர்கள் இருவரை காப்பாற்றிய நிலையில் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் லோகநாதன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
மகன் உயிரிழப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆர்.எஸ்.மங்கலம் காவல்நிலையத்தை பெற்றோர், உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின்பு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதியை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments