130 சவரனை பீரோவிலேயே வைத்து விட்டு கொள்ளை போனதாக புகார்.. நகை வைத்த இடத்தை மறந்ததால் ஏற்பட்ட குழப்பம்..

0 4209
சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியிலிருந்த நகையை மீட்டனர்.

சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியிலிருந்த நகையை மீட்டனர்.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் சரவணன், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 130 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளித்தார்.

இதனையடுத்து, உயரதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கைரேகை நிபுணர் வரும் வரையில் பீரோவில் சோதனை நடத்தவில்லை. கைரேகை நிபுணர் வந்து தடயங்களை சேகரித்து விட்டு, நகை திருடு போனதற்கான வாய்ப்பு இல்லையென கூறியதைத் தொடர்ந்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, பீரோவிலிருந்த துணிகளுக்கிடையே சோதனை நடத்தி நகையை போலீசார் மீட்டனர். நகையை வழக்கமாக வைக்கும் ரகசிய அறைக்குப் பதிலாக வேறு இடத்தில் வைத்து விட்டு திருடு போனதாக போலீசாரை அலைக்கழித்தற்காக சரவணனை போலீசார் எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments