டெல்லி - ராஜஸ்தானின் லால்சோட் விரைவுச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

டெல்லி - மும்பை இடையே ஆயிரத்து 386 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் நாட்டின் நீளமான எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அந்த விரைவுச்சாலையில் டெல்லி - ராஜஸ்தானின் லால்சோட்டை இணைக்கும் 246 கிலோ மீட்டர் நீள வழித்தடப் பணிகள் முதலில் நிறைவடைந்தன. 12 ஆயிரத்து 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அந்த வழித்தடத்தை, ராஜஸ்தானில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதிய எக்ஸ்பிரஸ் சாலை மூலம், டெல்லி - ஜெய்ப்பூர் இடையேயான பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரமாக குறைகிறது. மேலும், எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் முழுமையாக முடியும்போது, டெல்லி - மும்பை இடையிலான பயண நேரம் பாதியாக குறையும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நவீன சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் கட்டமைக்கப்படும் போது நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என்றார். கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments