21ஆம் நூற்றாண்டின் சிறந்த செயற்பாட்டாளர் பிரதமர் மோடி - ஆளுநர் ஆர்.என்.ரவி

"மோடி @20, நனவாகும் கனவுகள்", "அம்பேத்கர் &மோடி"புத்தகத்தின் தமிழ் பதிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், அந்த தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள மகத்தான இரு தலைவர்களின் புத்தகங்களை படிப்பதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை மட்டுமல்ல சமூக பிரச்சனைகளான பள்ளிகளில் இருந்த பிரிவினை, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்டவற்றையும் எதிர்த்தவர் என்றும் குறிப்பிட்டார்.
2047 இல் இந்தியா 40 ட்ரில்லியன் பொருளாதாரத்தில் மேம்பாட்டு உலகில் சிறந்த நாடாக மாறும் என்றும் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த செயற்பாட்டாளர் பிரதமர் மோடி என்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
Comments