தமிழக - கேரள எல்லைப்பகுதிகள், சுங்கச்சாவடிகளில் கொள்ளைக் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கை..!

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கேஸ் வெல்டிங் மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஆந்திர பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு, வெளிமாநிலத்தவர்கள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments