''துருக்கி, சிரியாவில் நிலநடுக்க உயிரிழப்புகள் 50,000-ஐ தாண்டும்..'' - ஐ.நா. எச்சரிக்கை..!

துருக்கியில், வாட்டி வதைக்கும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்றுவருகின்றன.
150 மணி நேரத்திற்கு பிறகும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் சிலர் உயிருடன் மீட்கப்படுவது மீட்பு குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் உயிரிழப்புகள் 29 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டக்கூடும் என ஐநா கணித்துள்ளது.
நிலநடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் கட்டடங்களை எழுப்பிய பில்டர்கள், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் என 113 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலநடுக்கத்தை சாதகமாக்கி திருட்டு, மோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments