குலுங்கிய மருத்துவமனை கட்டிடம்... இன்குபேட்டர்களில் இருந்த குழந்தைகளை கீழே விழாத வண்ணம் பாதுகாத்த செவிலியர்கள்.!

துருக்கியின் காசியாண்டெப் நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஒரு மருத்துவமனையில் இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த வீடியோ வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை கட்டிடம் குலுங்கியதில், பிறந்த குழந்தைகள் பிரிவில் இருந்த இன்குபேட்டர்களும் குலுங்கின.
நிலநடுக்கத்தை உணர்ந்த இரண்டு செவிலியர்கள் ஓடி வந்து, குழந்தைகள் கீழே விழாமல் பாதுகாக்க, இன்குபேட்டர்களை பிடித்துக் கொண்ட வீடியோவை துருக்கி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Comments