துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட தந்தை, மகள்..!

துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கிடையே இருந்து தந்தையும், அவரது 5 வயது மகளும் மீட்கப்பட்டனர்.
கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவித்த அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
Comments