புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து.!

புதுச்சேரி துறைமுகத்தில் விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வந்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி காரணமாக, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்களை இறக்கி மற்ற பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி உப்பளம் துறைமுக யார்டு பகுதி தூர்வாரப்பட்டு, சரக்கு குடோன்கள் தயாராக உள்ள நிலையில்,சோதனை ஓட்டமாக கொல்லத்தில் இருந்து சரக்கு கப்பல் உப்பளம் துறைமுகத்திற்கு இன்று வந்தது.
Comments