இந்தியா சார்பில் மேலும் நிவாரணப் பொருட்களுடன் சென்ற 7-வது விமானம் துருக்கி சென்றடைந்தது..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் துருக்கி சென்றடைந்தது.
மருந்து மாத்திரைகளுடன், இசிஜி கருவிகள், சிரெஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப்பொருட்களுடன் காசியாபாத் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் துருக்கியின் அதானா நகருக்கு சென்றடைந்தது.
நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது.
Comments