''நவீனத்துவத்தை கொண்டு வருவதுடன், பாரம்பரியத்தையும் இந்தியா வலுப்படுத்தி வருகிறது..'' - பிரதமர் மோடி

நவீனத்துவத்தை கொண்டு வருவதுடன், பாரம்பர்யத்தையும் இந்தியா வலுப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக சீர்திருத்தவாதியான தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓராண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பூஜை மற்றும் யாகத்தில் பங்கேற்று பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்கள் - சிறுமிகள் நடத்திய நிகழ்ச்சியை பிரதமர் கண்டு ரசித்தார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் நலனிற்கு முன்னுரிமை அளித்து அரசு செயலாற்றி வருவதாக கூறினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக தயானந்த சரஸ்வதி குரல் கொடுத்தவர் என மேற்கோள்காட்டிய பிரதமர், இன்று பெண்களும் ரபேல் போர் விமானங்களில் பறப்பதாக குறிப்பிட்டார்.
Comments