சாலையில் திடீரென திரும்பிய லோடு ஆட்டோ பைக் மீது மோதி விபத்து..!

கேரள மாநிலம் கொல்லம் அருகே, திடீரென சாலையில் திரும்ப முயன்ற லோடு ஆட்டோ, எதிரே வந்த பைக்கின் மீது மோதி, அதில் பயணித்த இருவரை இழுத்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஷவரா பகுதியில் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ, திடீரென சென்டர் லேனைக் கடந்து வலதுபக்கமாக திரும்ப முயன்ற போது, எதிரே இரும்புக் கம்பியுடன் இருவர் பயணித்த பைக்கின் மீது மோதியது.
இரும்புக் கம்பி மோதி ஆட்டோவின் முகப்பு கண்ணாடி உடைந்ததில், பைக்கில் பயணித்த இருவரும் ஆட்டோவின் விண்ட்ஷீல்டை பிடித்து தொங்கியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், கீழே விழுந்த இருவரும் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிக் கொண்ட நிலையில், பொதுமக்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர்.
Comments