துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கள மருத்துவமனையை அமைத்தது இந்திய ராணுவம்..!

துருக்கியின் ஹடாய் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் கள மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது.
6 மணி நேரத்திற்குள்ளாக அமைக்கப்பட்ட இந்த 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 24 நேரமும் செயல்பட்டு வருகிறது.
மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக 96 பேர் இந்திய ராணுவத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இம்மருத்துவமனையில் இதுவரை 800க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட துருக்கி மக்கள், தங்களுக்கு உதவியதற்காக இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Comments