பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளை.. கொள்ளையர்களை பிடிக்க ஆந்திராவுக்கு விரைந்தது தனிப்படை..!

பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மெஷினால் துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி நள்ளிரவு காரில் வந்த 4 முகமூடி கொள்ளையர்கள் 5 கிலோ சிலிண்டருடன் இறங்கி ஷட்டரை வெட்டி எடுத்து கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு, இரண்டே மணி நேரத்தில் சென்னையை விட்டு வெளியேறி திருமழிசை, ஊத்துக்கோட்டை வழியாக காரில் தப்பிச் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது.
அவர்கள் பயன்படுத்திய கார் போலி பதிவெண் கொண்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், செல்போன் சிக்னலை பயன்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
கொள்ளை கும்பல் சென்ற சொகுசு காரின் பின்புறம் மற்றொரு கார் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளதால், கொள்ளையர்கள் 2 கார்களில் வந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments