கடலூரில் ரயில் தண்டவாளத்தில் திடீர் ஏற்பட்ட விரிசலால் பரபரப்பு..!

கடலூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையிலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் பத்திரமாக கடந்துச் சென்றது.
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று காலையில் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தை கடந்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததையும், இதனால், ரயில் செல்லும் போது தண்டவாளத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் அங்கு பணியில் இருந்த கேட்கீப்பர் கவனித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
விரிசலை தற்காலிகமாக சரி செய்வதற்காக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்குச் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
விரிசல் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடத்திற்குப் பிறகு குறைந்த வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. தண்டவாள விரிசலுக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகிறது.
Comments